இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது , இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றி விட்டது.இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்று  டி 20  போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விவரம்-

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் , ராகுல் , மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் , புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அஜின்கியா ரஹானே, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக்  மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும்  இந்த டி 20  அணியிலும் இடம் இல்லை.

முதல் டி 20  போட்டி ராஞ்சியிலும், இரண்டாவது  கௌ ஹாதி நகரிலும், மற்றும் கடைசி போட்டி ஹைராபாத்தில் நடக்கவுள்ளது.

சினிமா பேட்டை காமெண்ட்ஸ்: யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா பாஸ் ஆகாத “யோ யோ”  பிட்னெஸ் டெஸ்டில் ஆஷிஷ் நெஹ்ரா எப்படி பாஸ் ஆகியிருப்பார்?