Connect with us

டீம்மில் விளையாடாதவர் கையில் வெற்றி கோப்பை! அசத்திய கோலி.. தோனியின் சிஷ்யர் ஆகிற்றே

Sports | விளையாட்டு

டீம்மில் விளையாடாதவர் கையில் வெற்றி கோப்பை! அசத்திய கோலி.. தோனியின் சிஷ்யர் ஆகிற்றே

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று பார்மட்களிலும் அசதி வருகின்றது. உள்ளூரில் புலி வெளிநாட்டில் எலி என்ற ஜாகையை உடைத்து விட்டனர் விராட் கோலி தலைமையிலான இந்த டீம். டி 20 , ஒரு நாள் போட்டிகளை காட்டிலும் இந்திய அணியின் டெஸ்ட் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வங்காளதேசத்துக்கு எதிராக மீண்டும் வெற்றி, அதிலும் குறிப்பாக பகல் – இரவு டெஸ்டிலும் கலக்கிவிட்டனர்.

இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் கேப்டனாக 41 சதங்கள் அடித்து, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் கோலி. இந்தியாவின் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்மூர்த்தி வேகப்பந்துவீ்ச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த கடைசி போட்டி துவங்கிய பின் ரிஷப் பண்ட் மற்றும் சூப்மன் கில் இருவரையும் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிக்காக சயீத் முஸ்தாக் அலி கோப்பை விளையாட ரிலீஸ் செய்தது. மேலும் சாஹாவுக்கு பேக் ஆப் ஆக கோனா ஸ்ரீகர் பரத் என்ற ஆந்திரா டீம் விக்கெட் கீப்பர் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோப்பையை கே எஸ் பரத் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக சென்றது பலரின் பாராட்டையும், கவனத்தையும் பெற்றது.

IND vs BAN

இதே போலவே தான் ரோஹித்தும் டி 20 வெற்றிக்கு பின் இளம் வீரர் சிவம் துபே கையில் கப் கொடுத்து ஓரமாக நின்றார்.

T 20 – IND vs BAN

அட நம்ம தோனி ஸ்டைல் பா இது சிஎஸ்கே டீமாகட்டும் இந்திய டீமாகட்டும், தல இப்படி தானே செய்வார். குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் என சொல்லி வருகின்றனர் இந்த போட்டோக்களை பார்த்து.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top