fbpx
Connect with us

Cinemapettai

நியூஸிலாந்துடனான ஒரு நாள் போட்டி- இந்திய டீம் விவரம் இதோ.

News | செய்திகள்

நியூஸிலாந்துடனான ஒரு நாள் போட்டி- இந்திய டீம் விவரம் இதோ.

ராகுல், ஷமி, உமேஷ் வெளியே … கார்த்திக், தாக்குர் உள்ளே ..

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. மேலும் டி 20 போட்டிகளில், மூன்றாவது போட்டி, மழை காரணமாக கை விடப்பட்டது, எனவே  1 – 1 என்று கணக்கில் தொடர் முடிவுற்றது.

இந்நிலையில் நியூஸிலாந்துடன் விளையாடும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணி விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விவரம்-

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் , அஜின்கியா ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் , புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஷரத்துல் தாக்குர்.

தற்பொழுது உள்ள டி 20 டீமில் இருந்த கே.எல்.ராகுல் ,ஆஷிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக அஜிங்க்ய ரஹானே மற்றும் ஷரத்துல் தாக்குர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும்  இந்த அணியிலும் இடம் இல்லை. எனவே மீண்டும் கோஹ்லி அக்சார் பட்டேல், குலதீப் யாதவ் , மற்றும் யுவேந்திரா சாஹல்  இவர்களின் ஸ்பின் பந்துவீச்சை நம்பி களம் இறங்குகிறார்.

ஆஸ்திரேலிய போட்டியில் விளையாட  ராகுலுக்கு வாய்ப்பு அமையவில்லை என்றாலும், இலங்கை போட்டிகளில் சொதப்பியதால் தான் அவருக்கு இந்த டீமில் இடம் இல்லை . எனினும் முன்பே டி 20 அணியில் இருந்து நீக்கப்பட்ட மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இருவருக்கும் வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்கப்பட்டது ஆச்சிர்யமான முடிவு என்று தான்  சொல்ல வேண்டும் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top