Connect with us

Cinemapettai

விராட் கோலி பிறந்தநாள் கொண்டாட்டம். போட்டோ மற்றும் வீடியோ உள்ளே.

Photos | புகைப்படங்கள்

விராட் கோலி பிறந்தநாள் கொண்டாட்டம். போட்டோ மற்றும் வீடியோ உள்ளே.

05-11-1988  (Virat Kohli) இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்த தினம். நியூஸிலாந்துடனான டி-20 போட்டி முடிந்ததும், தன் டீம்முடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் விராட் கோலி.

விராட் கோலி:

இன்று உலக கிரிக்கெட்டில் ட்ரெண்டிங் ஆகும் நபர் என்றால் அது விராட் கோலி தான். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி- 20 அனைத்திலும் டாப் கிளாஸ் பேட்டிங் புரிபவர். இந்திய அணியின் கேப்டன் ஆனதில் இருந்து வேற லெவல் சென்றுவிட்டார். ஒருபுறம் பொறுப்பான பேட்டிங் மறுபுறம் ஆக்கிரோஷமான கேப்டன் பணி. அனுஷ்காவுடன் மென்மையான காதல், விளம்பரங்களில் நடிப்பது, பிற விளையாட்டு டீம்கள் வாங்குவது என்று ஏக பிஸி. இவர் தன் பெயரில் சோசியல் சர்வீசும் செய்து வருகிறார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா வக்கீல், அம்மா இல்லத்தரசி. இந்தக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் தான் விராட். தன் 3 வயது முதலே கிரிக்கெட் பாட்டுடன் வளம் வருவராராம் கோலி. இவரை ஒன்பதாவது வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டாராம் இவர் தந்தை. பின்னர் பள்ளிப் போட்டிகள் , யூ-19 டீம் என்று படிப்படியாக வளர்ந்து இந்த நிலையயை அடைந்துள்ளார்.

Virat Kohli wears jersey number 18 in remembrance of his Father.

யூ-19 கேப்டன், ஜெர்சி நம்பர் 18:

2008 இல் நடந்த ஜூனியர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அந்த டீம்மின் கேப்டன் இவரே. நான்காவதாக பேட்டிங் செய்த விராட் 235 ரன்கள், 6 போட்டிகளில் அடித்தார்.

விராத்தின் 18ஆம் நம்பர் முடிவுக்கு மிக பெரிய செண்டிமெண்ட் உள்ளதாம். அவரது தந்தை இறந்த தினம் 18 டிசம்பர் 2006 . அப்பொழுது அவரின் வயது 18. இந்த நம்பரை விராட் தன்னுயடைய இந்தியா யூ-19 அணியில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறார்.

விராட் கோலியின் செல்லப் பெயர்- CHEEKU :

பெரிய சைசிலான காதுகளை கொண்ட கோலி, ஒருமுறை ஷார்ட்டாக முடி வெட்டியிருந்தார். இதை பார்த்த அவரது டெல்லி பயிற்சியாளர்களில் ஒருவர், முயலை போன்று இருப்பதாக கூறி “சீக்கு” என்ற பெயரைக் கொண்டு அழைத்துள்ளார். அன்று முதல் கோலி, ‘cheeku’ என்று செல்லமாக பிற வீரர்களால் அழைக்கப்படுகிறார்.

பல விருதுகள், உலக சாதனைகள் என்று கலக்கி வரும் விராட் கோலி அவர்கள் ஸ்டாட்ஸ்  விவரம் இதோ:

Virat Kohli Batting Statistics

பிறந்தநாள் கொண்டாட்டம்:

நேற்று ராஜ்கோட்டில் நடை பெற்ற நியூஸிலாந்துடனான டி-20 போட்டியில் இந்தியா அணி 40 ரன் வித்தியாசத்தில்  தோல்வி அடைந்தது. கேப்டன் விராட் மட்டும் அதிரடியாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் போட்டி முடிந்ததும் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

விராட் கேக் வெட்டும் வீடியோ:

கிரிக்கெட் மைதானம் போன்ற வடிவமைப்பில் ஒரு கேக். அதன்  பிட்சில் ஹாப்பி பர்த்டே  விராட் என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

இரண்டாவது கேக்கில் பேட், பாலுடன் விராட் கோலியின் சிறிய சைஸ் பொம்மை கிரௌண்டில் அமர்வது போல இருந்தது. மேலும் மூவ் அகோஸ்டிக்ஸ் என்ற வாசகமும், எவோக் ஹெட் செட்டின் சிறிய வடிவமும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி- கேக்

விராட் கோலி

கேக் வெட்டியதும் தன் டெல்லி டீம் மேட் ஆன ஷிகர் தவானுக்கு ஊட்டி விட்டார்.

Virat Kohli Shikar Dhawan

வழக்கம் போல யுவேந்திர சாச்சல், குலதீப் யாதவ், அக்சார் பட்டேல், கேக் எடுத்து முகத்தில் பூச ஆரம்பித்தனர்.

Team Mates applies cake over Virat

எப்பொழுதும் அமைதியாக இருக்கும் புவனேஸ்வர் குமார் கூட, வீரத்தின் ஹெட் செட்டை எடுத்து மாட்டி விட்டார். பின் குட்டி சைஸ் பொம்மையை எடுத்து இவரின் தலையில் வைத்தார்.

Bhuvaneshwar Kumar making fun

குட்டி பாட்டுடன் விராட் அட்டகாசமாக போஸ் கொடுத்தார்.

Virat Poses with the miniature bat.

இந்த கொண்டாட்டத்துக்கு பின் விராட் கோலி தன் ட்விட்டரில் நன்றிகளை  தெரிவித்தார்.

விராட் கோலி

இளம் புயல் விராட் கோலிக்கு பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். அதில் ஒரு சில..

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

மனிதர் இந்நேரம் அனுஷ்கா ஷர்மாவுடன் தான், தன் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். ஹாப்பி பர்த்டே வாழ்த்துக்கள் டு யூ சீக்கு. விரைவில் திருமணம் செய்யுங்க ப்ரோ. அனுஷ்கா வைட்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top