Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட.! ஆச்சர்யப்பட்ட போலீஸ் கமிஷனர்.. கலக்கி கொண்டிருக்கும் அஜித் டீம்
அஜித்தின் விஸ்வாசம் ஒருபுறம் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் போதே அவரின் ஆலோசனையில் உருவாக்கப்படும் #TeamDhaksha கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது உருவாக்கப்பட்ட கேமரா பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தீபாவளி பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். இதனை கமிஷனர் டாக்டர் ஏ கே விஸ்வநாதன் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து வேலூர் வரை ஹெலிகாப்டர் ஒன்றை இயக்கி சாதனை படைத்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருவதால் டி நகர் பகுதியில் மிக அதிகமான மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிக்காக இந்த கேமரா பொருத்திய ஹெலிகாப்டர் உபயோகப் படுத்தப்படுகிறது.
இதன் பயன்பாட்டை கமிஷனரிடம் காமிக்கும்போது ஆச்சர்யபட்டு போனாராம். தான் மட்டும் வாழாமல் தன்னை சார்ந்தவர்களையும் வாழவைக்கும் தல அஜித்தை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைத்தால் என்றுமே வெற்றிதான். வாழ்க்கையில் பல சோதனைகளை பார்த்துவிட்டு அதனை தனக்கான வெற்றிப்படிகளாக மாற்றி அஜீத்தின் ரசிகராக இருப்பவர்களுக்கு என்றுமே வெற்றிதான். சமுதாயத்தில் இது போன்ற அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அடையாளம் உலக அளவில் உருவாக்கப்படும்.
விஸ்வாசம் படத்தின் ரசிகர் உருவாக்கின போஸ்டர் விசுவாசமான ரசிகர்களுக்காக,
