Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிப்பின் நாயகனை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற அர்ஜுன் தாஸ்! வைரலாகுது போட்டோ
அர்ஜுன் தாஸ் – தமிழ் சினிமாவில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ள நடிகர். தனது அசால்டான லுக் மற்றும் வாய்ஸ் இவருக்கு மிகப்பெரிய பிளஸ்.
2012 ஆம் ஆண்டே சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், வெற்றி பெற முடியாமல் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்தவர். கைதி படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய கேரியரை துவங்கி உள்ளார் என்றால் அது மிகையாகாது. தற்போது இவருக்கு இருக்கும் மவுசு வேரெந்த வில்லனுக்கும் கிடையாது. மாஸ்டர் ரிலீசுக்கு வைட்டிங்.
இந்நிலையில் சமீபத்தில் நெட் பிலிக்ஸ் தளத்தில் இவர் நடிப்பில் அந்தகாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷனின் நடிப்பை பாராட்டத்தவர்களே இல்லை. {அந்தகாரம் திரைவிமர்சனம்}
இயக்குனர் அட்லீ டீமுடன் உலகநாயகன் கமல் அவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த் போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்தது.

team andhagaraam
உலகநாயகன் கமலஹாசன் பற்றி அர்ஜுன் தாஸ் ட்வீட் செய்துள்ளார். “நான் நடிகன் ஆவதற்கு கமல் சார் அவர்களும் ஒரு காரணம். இதனை வருடங்களாக அவரை பார்த்து விட மாட்டோம்மா என அவரது அலுவலகம் கடக்கும் பொழுது யோசிப்பேன். ஆனால் அவரை சந்தித்து, அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளேன். இது என் வாழ்வின் மறக்கமுடியாத தினம். நன்றிகள் சார்.” என பதிவிட்டுள்ளார்.
குட்டி ரகுவரனுக்கு சினிமா பேட்டை சார்பில் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
