பாகிஸ்தான் நாட்டில் பள்ளி அறையை சுத்தம் செய்யாத மாணவியை ஆசிரியர் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பஜ்ஜர் நூர் என்னும் மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை ஆசிரியர் புஷ்ரா பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சசிகலாவை சந்தித்த நடிகர்கள்!

ஆனால் மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றது. என்னால் அறையை சுத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவியை மாடிக்கு அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவர் மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கயல் ஆனந்தியின் கால்களை ரசித்து ரசித்து பார்த்த இசையமைப்பாளர்.!

இதில் கீழே விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.