அஜித்தை ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களில் பிடிக்கும். அவர் செய்த ஏதாவது ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகர்களாக மாறியிருப்பார்கள்.

தற்போது அனைவரும் அவரின் விவேகம் பட டீஸருக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் மே 11ம் தேதி டீஸர் வெளியாகிறது என்று இயக்குனர் சிவா கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடன அமைப்பாளர் காயத்ரி ரகுமான் டுவிட்டரில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் அஜித்தை பற்றி கூறுங்கள் என்று கேட்க, அவர் தல மிகவும் நல்ல மனிதர்.

எல்லா இளைஞர்களும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.