Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.
இன்றைய யூத் சென்சேஷன் இவர் தான். தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் தமிழகத்திலும் தன் கொடி நாட்டிவிட்டார். கீதா கோவிந்தம், NOTA , படங்களை தொடர்ந்து இவர் அடுத்த படம் தெலுங்கில் ரிலீசாகிறது.
டாக்ஸிவாலா

Vijay Devarkonda Taxiwaalaxiw
ராகுல் சங்கரித்யன் என்பவர் இயக்கும் படம். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பிரியங்கா மற்றும், மாளவிகா நாயர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார், சாய்குமார் ரெட்டி திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசை. ‘UV கிரியேஷன்ஸ் – GA2 பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
Young director, young team, young story, young cast & your man in combination with UV&GA2.#Taxiwaala arrives Nov16. pic.twitter.com/umLoGWGpqC
— Vijay Deverakonda (@TheDeverakonda) October 20, 2018
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ப்ரோமோ முன்பே வெளியானது. இந்நிலையில் படம் நவம்பர் 16 ரிலீசாகிறது என்பதை தன ட்விட்டரில் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார் நம் ஹீரோ.
