Connect with us

Cinemapettai

குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Tasmac_cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பொதுமக்கள், பணியாளர்கள், பார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் புகார் அளித்தும் பலனில்லை என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதில் கடைகள் மற்றும் பணியாளர்கள் இடம்மாறுதல், பணியமர்த்தல், காப்புத்தொகை திரும்பப்பெறல், பணப்பயன்கள், மதுபானங்கள் கூடுதல் விலை, மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே செயல்படுவது உள்ளிட்டவையே அதிகம் வந்துள்ளது

இதனால் தலைமை அலுவலகத்தில் மனு குவிந்து வருவதால் பணிகளில் இடையூறாகிறது. மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். இதனால் அதிக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதனை தவிர்க்க இனி ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் செவ்வாய்க்கிழமைகளில் (விடுமுறையாக இருந்தால் அதற்கு அடுத்த நாட்களில்) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும். இதில் பொதுமக்கள், பணியாளர்கள், பார் தின்பண்ட உரிமைதாரர்கள் பங்கேற்று குறைகள் மற்றும் புகார்களை கூறலாம். இந்த குறைதீர் கூட்டம் குறித்து அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

பெறப்படும் கோரிக்கை மனுக்களின் விவரங்கள் தனி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மனு கிடைத்த 15 நாட்களுக்குள் மனுவின் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும். நடவடிக்கை தாமதமாகும் பட்சத்திலும் மனுதாரருக்கு அதுகுறித்த தகவல் அளிக்க வேண்டும்.

மாவட்ட மேலாளர் அளவில் பணியாளர்களின் குறைகள் கேட்டறியப்படுகிறதா? வாராந்திர ஆய்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா? பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறதா? என்பது குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாதாந்திர மாவட்ட மேலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் ஆராய்வது முக்கியம்.

மேற்கண்ட அறிவுரைகளை மாவட்ட மேலாளர்கள் நடைமுறைப்படுதத நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் டாஸ்மாக்கில் மதுஅருந்தும் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவது, தண்ணீர் பாக்கெட்டுக்கு அதிக பணம், சைடீஸ்க்கு அதிக விலை, டூப்ளிகேட் சரக்கு பிரச்சனை போன்றவற்றை சொல்ல முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top