Tamil Nadu | தமிழ் நாடு
அநியாய விலையில் சரக்கு விற்பனை.. பொங்கிய குடிமகன்கள் நோட்டீஸ் அடித்து போராட்டம்
தமிழக அரசின் வருமானம் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளை நம்பியே உள்ளது. கடந்த தீபாவளி விடுமுறையில் மூன்று நாட்களில் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அன்னூர் அருகே குடிமகன்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நோட்டிஸ் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றதால் இத்தகைய முடிவை எடுத்ததாக தெரிவிக்கின்றனர். அவர்களது நோட்டீஸில் தெரிவித்திருப்பது என்னவென்றால், அன்னூர் ஒன்றியத்தில் சுமார் எட்டு டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 3950 குவாட்டர்களும், 3300 பீர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் ஒரு மாதத்திற்கு சுமார் 25 லட்சம் வரை சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன எனவும், ஆனால் அரசு நிர்ணயித்த விலையை விட குவாட்டருக்கு 5 முதல் 7 ரூபாய் வரையும், பீருக்கு 7 முதல் 10 ரூபாய் வரையிலும் கூடுதலாக வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனபால் அவர்களின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பி இவன் அன்னூர் வாழும் மதுபிரியர்கள் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர்.
வேடிக்கை பண்றாங்கப்பா.!

annur-tasmac
