Connect with us

Cinemapettai

குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! வரும் சனி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

Tasmac_cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! வரும் சனி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

மக்களவை தேர்தலானது நடைபெற்று முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இருந்தாலும் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் அதன் தேர்தல் மட்டும் தர்காலிக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் தேர்தலை தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் வேட்பு மனு தாக்கல் எல்லாம் முடிவு பெற்று தற்போது தேர்தல் பிரச்சாரம் அங்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாவட்டத்தில் உள்ள அணைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். இதன் படி வரும் சனி 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும் எந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதே போல அங்கு தேர்தல் முடிவுகள் எண்ணப்படும் நாளான 9 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இது அங்குள்ள குடிமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top