நம்ம ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி நடிப்புல தமிழ் எம். ஏ இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவரப்போற படம்தாங்க தரமணி.

படத்தின் கதை இப்போது உள்ள ஐ.டி காதல்களை பற்றியும், அவர்களது ஊடல் கூடல் பற்றியும் விவரிக்கும் படமா இருக்கும்னு எதிர்பார்க்கபடுகிறது.

படத்தின் இசை வழக்கம்போல நம்ம யுவன்தான். படம் ஆகஸ்ட் 11ல் திரைக்கு வரும்னு எதிர்பார்க்கபடுகிறது.

ஆண்களை சந்தேககாரர்களாய் பெண்களை தைரியமானவர்களாய் சித்தரிக்கும் முதல் இரண்டு டீசர்களையும் எல்லாரும் பார்த்துருபிங்க.
இந்த படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூன்றவது டீசரில் அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதனை கண்ட தணிக்கை குழு டீசரின் பல இடங்களில் mute செய்து டீசரை வெளியிட அனுமதித்துள்ளது.

ஆனால் நம்ம ராம் தணிக்கைக்கு எதிராக டீசரில் கெட்ட வார்த்தைகளை மட்டும் கேட்கும்படியும் மற்ற சாதாரண வார்த்தைகளை mute செய்தும் டீசரை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.

டீசரில் ஆண்ட்ரியா மழையில் வண்டியை எடுக்க முற்படும்போது சில ரவுடிகள் ஆண்ட்ரியாவை வம்பிழுக்கிறார்கள் இதனால் கோவம் அடைந்த ஆண்ட்ரியா அவர்களை தகாத வார்த்தையில் திட்டி செருப்பால் அடிப்பது போல் டீசர் காட்சிகள் உள்ளன.

சர்ச்சைக்குரிய அந்த டீசர் இதோ உங்கள் பார்வைக்கு

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ஆண்ட்ரியா கெட்ட வார்த்தை பேசியது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நல்ல வேலை எல்லா கெட்ட வார்த்தையும் ஆங்கிலத்துல இருக்கு. அர்த்தம் தெரியாம நம்ம பயலுக படத்தை பார்த்துட்டு வந்துருவானுக…