Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன்னுடைய லிப்-லாக் முத்தக்காட்சியை வெளியிட்ட டாப்ஸி
ஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கினார், ஜி. வி. பிரகாஷ் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்சி ஆகியோர் நடித்தார்கள்.
2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்று தங்கத்தாமரை விருதும், அவருக்கே சிறந்த திரைகதைக்கான விருதும் நடன இயக்குநர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குநர் விருதும் கிடைத்துள்ளது.
தமிழில் டாப்ஸி பெரிதாக தலைகாட்டவில்லை ஆனால் ஹிந்தியில் கொடிகட்டி தான் பறந்து கொண்டிருக்கார், பிங்க் பட வெற்றிக்கு பிறகு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடித்து வருகின்றார்.
தற்பொழுது இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் அதில் அவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது இந்த காட்ச்சியை டாப்ஸியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் .
