Connect with us

Cinemapettai

இந்தியில் பேச சொன்ன பார்வையாளர்.. தமிழ் என்ற ஒரு வார்த்தையில் வாயடைக்க வைத்த டாப்ஸி

tapsee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியில் பேச சொன்ன பார்வையாளர்.. தமிழ் என்ற ஒரு வார்த்தையில் வாயடைக்க வைத்த டாப்ஸி

கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் நடிகை டாப்ஸி. நேற்று அரங்கில் இருந்தவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட நபர் ஒருவர் இந்தியில் பேசும்படி டாப்ஸியிடம் கேட்டார்.

உடனடியாக மக்கள் பக்கம் திரும்பிய டாப்ஸி, “இங்குள்ள அனைவருக்கும் இந்தி புரிகிறதா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என்றார்கள். ஆனால் அந்த நபரோ, டாப்ஸி பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.

இதை கேட்ட டாப்ஸியோ, “நான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களிலும் ஒரு நடிகை. அப்படியானால் நான் உங்களிடம் தமிழில் பேசலாமா?” என அவரை பார்த்து கேட்டார். இதனால் வாயை மூடிக்கொண்ட அந்த நபர் அப்படியே அமைதியானார். டாப்ஸியின் பதில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவுக்கு தான் நன்றி சொல்வதாகவும். கேமரா, நடிப்பு, சினிமாவின் அடிப்படைகள் என்னவென்று அவர்கள் தான் தனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் டாப்ஸி நெகிழ்ச்சி அடைந்தார்.

இப்போது தான் மொழியையும் கற்றுக்கொண்டதாகவும் பாலிவுட்டுக்கான ஒரு படியாக தென்னிந்திய சினிமாவை நான் பயன்படுத்தியது இல்லை என்றும் தென்னிந்திய சினிமாவில் தொடர்நது பயணிக்க விரும்புவதாகவும் டாப்ஸி கூறினார்.

https://twitter.com/batman_tn/status/1198493760675438594?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top