Tapsee, Ajith in Aata Arambam Movie

டாப்சி என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆடுகளம் படத்தில் சுருள் முடியுடன் வெள்ளை வெளேரென்று பொம்மை போல் வரும் அழகிதான். ஒரே படத்தில் நம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர்.

தெலுங்கு, ஹிந்தி என்று அடுத்தடுத்து செல்லும் இவர் ஹாலிவுட் படத்திலும் நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது.

இவரது அழகு, நடிப்பு இவை ஒருபுறம் இருக்க இவரது இன்னொரு வாழ்க்கை அனைவராலும் மதிக்கத்தக்கதாக உள்ளது. இவர் ஒரு சிறந்த சமூக சேவகி. பெண்களுக்கான விழிப்புணர்வுக்காக பல சேவைகள் புரிந்துள்ளார்.

சில காலம் முன்பு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செய்திகளை இணையத்தில் வீடியோ மூலம் பரவவிட்டார். இது பெருமளவில் பலரை சென்றுசேர்ந்தது.

தற்போது பெண்கள் அனைவரும் குறைந்தபட்ச தற்காப்பு வித்தைகளை அறிந்துகொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்து வருகிறார். இதில் அவரே சில ஆண்களுடன் தற்காப்பு பயிற்சி செய்வது போன்று காட்சிகள் உள்ளன. ஆபத்து எப்போது வேண்டுமானாலும் பெண்களை நோக்கி வரலாம், அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள பெண்கள் அனைவரும் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பெண்களுக்கான உடற்பயிற்சி குறித்து அவர் வெளியிட்ட வீடியோ செய்த சாதனையை எளிதில் மறக்க இயலாது.