Tamil Cinema News | சினிமா செய்திகள்
காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போயிடும்.. அஜித் பட வில்லன் நடிகருடன் ஜோடி போடும் கருப்பன் பட தன்யா
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர் தன்யா ரவிச்சந்திரன். சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் கருப்பன், அருள்நிதியுடன் பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்தாலும் பெரிய அளவு அவரால் ரசிகர்களை கவர முடியவில்லை.
அதன் பிறகு தற்போது வரை பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்தார். தமிழில் கைவசம் ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாய்ப்புகளுக்காக தடுமாறி வந்தார்.
மேலும் பட வாய்ப்புகளுக்காக சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எதெல்லாம் வெளியில் காட்டக் கூடாதோ அதையெல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டு தற்போது ஒரு தயாரிப்பாளரை மயக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.
சிந்தின ரத்தத்திற்கு சொந்தம் வராமலா போய்விடும் என்பதை போல காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும் என்பதற்கு சான்றாக தற்போது தெலுங்கிலிருந்து தன்யாவுக்கு ஒரு புதிய பட வாய்ப்பு வந்துள்ளதாம்.
வலிமை படத்தில் வில்லனாகவும் தெலுங்கில் பிரபல நடிகராகவும் வலம் வரும் கார்த்திகேயா உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
