Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடப்பாவிங்களா..? இந்த படத்தையும் விட்டுவைக்கலையா.! முன்னணிநடிகர் படத்தை மரணமாய் கலாய்த்த தமிழ்படம்-2

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தமிழ்படம் இந்த படத்தில் பல படங்களையும் ஹீரோக்களையும் கலாய்த்து கிண்டலடித்து எடுத்திருந்தார்கள் அதனால் ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் தமிழ்படம்-2 என்ற பெயரில் உருவாக்கி வருகிறது இந்த அப்டத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் பாடல் என அனைத்திலேயும் அரசியல்வாதிகள் முதல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரை கிண்டலடித்து எடுத்துள்ளார்கள்,
இந்த நிலையில் இப்போது ரஜினியின் காலா போஸ்டரை மரணமாய் கலாய்த்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள ஒரு போஸ்டரில் சிவா, காலா ரஜினி போன்று கறுப்பு நிற உடை மற்றும் கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்துள்ளார். காலாவில் ரஜினியுடன் ஒரு நாய் இருந்தது. ‘தமிழ்ப்படம்-2’ போஸ்டரில் சிவாவுடன் டைனோசர் இடம்பெற்று இருக்கிறது.

tamizhpadam2
