Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரபரப்பை ஏற்ப்படுத்த பாகுபலி படத்தையே கலாய்த்து போஸ்டரை வெளியிட்ட தமிழ்படம்-2

தற்பொழுது சிவா நடித்துவரும் திரைப்படம் தமிழ்படம்-2 இந்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார் இவர் இதற்க்கு முன் தமிழ்படம் முதல் பாகத்தையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் சினிமாவை மட்டுமே கலாய்த்த இப்படக்குழு, இப்பாகத்தில் சினிமாவையும் தாண்டி அரசியல் உள்பட தற்சமயம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கலாய்த்து உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்படம் இரண்டாம் பாகத்தை இந்த மாதம் 13ம் தேதி திரையிடபோவதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு மக்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்து வருகிறார்கள். இப்படத்திற்கு தற்போது ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அதானால் மிக பிரமாண்ட ஹிட் ஆனா பாகுபலி படத்தில் பாகுபலியில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வருவது போல, சிவா ‘யூ’ எழுத்தை தூக்கிக் கொண்டு வருவது போன்ற போஸ்டரை போட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுதியுள்ளர்கள்.
