சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்து வரும் படம் ‘தமிழ்ப்படம்-2’.தமிழ்படம் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் எடுத்துள்ளார்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு படத்தின் போஸ்டரை கலாய்த்து வருகிறார்கள்.

TP 2

இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார், என்.கண்ணன் இசையமைத்துள்ளார். அனைத்து  படங்களையும் கலாய்க்கும் வகையில் தினமும் ஒரு போஸ்ட்டரினை வெளியிட்டு வருகிறார் இந்த படக்குழுவினர்.

அதன்படி, நேற்று விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தின் போஸ்ட்டர், சிம்புவின் ‘மாநாடு’ பட போஸ்டர் வரை அனைத்தையும் கலாய்த்து விட்டனர். இதனை தொடர்ந்து தற்போது விவேகம் பட போஸ்டரை கலாய்த்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.