Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு

Mirchi Shiva

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ் படம் 2.0 என்ற பெயரை தமிழ் படம் 2 என படக்குழு மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சமகால தமிழ்த் திரைப்படங்களை பாகுபாடு பார்க்காமல் கிண்டல் செய்து வெளியானது தமிழ் படம். இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார். சி. எஸ். அமுதன் படத்தை இயக்கியிருந்தார். திஷா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தின் இண்ட்ரோ பாடல் முதல் கிளைமேக்ஸ் வரை இயக்குனர் பல படங்களை கலாய்த்து இருந்தார். இதனால் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சக்கை போடு போட்டது.

இதை தொடர்ந்து, கோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை போல சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவே நடித்திருக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் சதீஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படத்திலும் சமீபத்திய எல்லா படங்களையும் மனசாட்சியே இல்லாமல் படக்குழு கலாய்க்க இருப்பது டீசரிலேயே தெரிந்து விட்டது. ஒரே டீசரில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்த எல்லா படங்கள் முதல் வைரல் கண்டெண்ட் வரை வாரி இருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ் படம் 2.0 என்ற பெயரை தமிழ் படம் 2 என்று மாற்றியுள்ளனர். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என்பதால் தலைப்பை மாற்றியதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் வைரல் பட்டியலில் படம் இடம் பெற்று இருக்கிறது. ஒரு வேளை ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தரப்பில் இருந்து வந்த பிரச்சனைகளால் மாற்றப்பட்டு இருக்குமா எனவும் நெட்டிசன்கள் கிசுகிசுக்கின்றனர். அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இவங்க இல்லையே!

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top