Politics | அரசியல்
சீமான் தமிழரின் அடையாளமா? பொங்கிய தமிழிசை
சின்மயி வைரமுத்து பற்றிய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் பாஜக வின் தமிழிசை பல கருத்துகளை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக செய்தியை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மறுப்புத் தெரிவித்ததுடன் சின்மயி அவரை பொய் பேசுகிறவர் என்ன ட்விட்டரில் பதில் சொல்லியிருந்தார். வைரமுத்துவும் விடாமல் ஒரு வீடியோ வெளியிட்டார் என் மீது தவறு இருந்தால் வழக்கு தொடருங்கள் நான் வழக்கில் சந்திக்கிறேன் என வீடியோ வெளியிட்டார்.
இந்த விவகாரம் இப்படி சூடுபிடித்த நிலையில், சீமான் “வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம்; வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. எல்லா கற்களும் ஏன் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்? என தெரிவித்தார்.
சீமானின் இந்த கருத்துக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,“கவரிமானாக வாழ்பவர்களே தமிழர்களின் அடையாளம். “கவர்ச்சி”மானாக வாழ்பவர்கள் அல்ல.இவர்தான் தமிழர் எனும் அடையாளம் காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்? ஒடுக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பதே தமிழர் அடையாளம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குரல் கொடுத்து வருவதால் சின்மயி பின்னணியில் பாஜக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் ஆனால் உண்மை என்னவென்று போகப் போகத்தான் தெரியும். சித்ரா ஜானகி சொர்ணலதா என குத்து விளக்காக இருந்த இசையில் பாப், ராக், பார்ட்டிகள் என பாடகர்கள் வந்து இசையை கெடுத்து விட்டனர் என ஒரு சிலர் கூறுகின்றனர். பொருத்திருந்து பார்க்கலாம்.
