சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வரும் தமிழ் படம் 2வின் இசை வெளியிடு குறித்த முக்கிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து 2010ம் ஆண்டு வெளியானது தமிழ் படம். இத்திரைப்படத்தை சி. எஸ். அமுதன் இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவா நாயகனாகவும், திஷா பாண்டே கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தின் இண்ட்ரோ பாடல் முதல் கிளைமேக்ஸ் வரை கோலிவுட்டின் பல படங்களை கலாய்த்து இருந்தது படக்குழு. இதனால் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சக்கை போடு போட்டது.

அதிகம் படித்தவை:  பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயுடன் இணைந்த ஆர் கே !

இதை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவே இப்படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் காமெடியன் சதீஷ் வில்லனாகவும் நடித்து இருக்கிறார். படத்தில் அவருக்கு 15 கெட்டப்புகள் எனவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் சமீபகாலமாக வெளிவரும் படங்களையும், புதுப்படங்களின் பர்ஸ்ட் லுக்கையும் பாரபட்சம் இல்லாமல் கலாய்த்து வருகிறது தமிழ் படம். இதனால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் என அனைத்தும் வைரல் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

அதிகம் படித்தவை:  67 பந்தில் ‘200’ ரன்கள் எடுத்து உலகை மிரள வைத்த மும்பை நாயகன்!

இந்நிலையில், படத்தின் இசை வெளியீடு நாளை(29 ஜூன்) நடைபெற இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் வெளியிடப்பட்ட போஸ்டரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற வசனம் இடம் பெற்று இருக்கிறது. சிவாவும் கமல்ஹாசனின் ட்ரேட் மார்க் போஸில் இருப்பது மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.