ஜெய் தனக்கான இடத்தை திரைத்துரையில் பிடிக்க போராடி வருகிறார். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என ஹிட் படங்கள் கொடுத்தாலும் ஒரு சில தவறான கதை தேர்வால் தடுமாறி வருகிறார், இவர் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்

கதை

ஊரில் எந்த வேலையும் பிடிக்காமல் சென்னைக்கு வரும் ஜெய் ஒரு கொரியர் கம்பெனியில் வேலைக்கு செல்கிறார், அங்கு யாமி கௌதமை பார்த்தவுடன் காதல், அந்த காதலை மேலும் பலப்படுத்த தன் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்து அவர் பின்னாலேயே சுற்றி காதலிக்க வைக்கின்றார்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு 2 பிரஸ் மீட்டில்: ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர். சி !

இதற்கிடையில் சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

இவரின் நாச வேலைகளை தம்பிராமையா தடுக்க நினைத்து, அனைத்து தகவல்களையும் சேகரித்து சமூக ஆர்வலர் நாசருக்கு அனுப்புகிறார், அந்த கொரியரை அனுப்பும் வேலை ஜெய்யின் கைக்கு வர, இந்த உண்மை வில்லனுக்கும் தெரிய பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

அதிகம் படித்தவை:  ஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்தில் இருந்து ஓ கனவே லிரிக்ஸ் வீடியோ.!

விமர்சனம் 

ஜெய், சந்தானம், விடிவி கணேஷ் நடிக்கும் லூட்டி, எடுத்துக்கொண்டு கதைக்களம், நாசர், தம்பிராமையா, சரண்யா பொன்வன்னனின் யதார்த்தமான நடிப்பு.

திரைக்கதை இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.மொத்ததில் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் இந்த கொரியரை கொண்டு வந்து சேர்த்திருக்கலாம்.

RATING 2.75/5