actress tamil still

நடிகர் சூர்யா நடித்த 7ம் அறிவு திரைப்படத்தில், முக்கியமான காதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.

அதை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜ ராணி போன்ற படங்களில் நடித்தவர்.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் தோல்வி அவசியப்பட்டது. அதன்படி பெங்களூரு அணி தோல்வியுற்றது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த தன்யா பாலகிருஷ்ணன், தமிழர்களை மோசமான வார்த்தைகளால் கொச்சை படுத்தினார்.

அதன்படி அவர், “டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்கு பிச்சை எடுத்தீர்கள், நாங்கள் கொடுத்தோம். நீங்கள் மின்சாரத்திற்கு பிச்சையெடுத்தீர்கள் நாங்கள் கொடுத்தோம்.

உங்கள் ஆட்கள் எங்கள் அழகான பெங்களூர் நகரை வந்து ஆக்கிரமித்துக்கொண்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதை அனுமதித்தோம். இப்போதும், பிளேஆப் நீங்கள் செல்ல எங்கள் கருணைதான் தேவைப்படுகிறது. நாங்கள் இப்படித்தான். நீங்கள் பிச்சையெடுப்பதும், நாங்கள் கொடுப்பதும் வழக்கம்” இவ்வாறு கேவலமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து, தன்யாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கோலிவுட்டிலிருந்தே வெளியேறுவதாக அறிவித்தார் தன்யா. “நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.

திரும்பி வரமாட்டேன்” என்று ரோஷமாக நடையை கட்டியவர், இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். ஸ்டார் நெட்வொர்க்கின் ஹாட்ஸ்டார் செயலி வாயிலாக வெளியான As I’m Suffering From Kadhal என்ற வெப்சீரிசில் நடித்துள்ளார். மாரி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்த வெப்சீரிசை இயக்குகிறார்.

தமிழர்களை இவ்வளவு மோசமாக பேசிய ஒருவர், கன்னடத்தில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் சத்தம் இல்லாமல் தமிழுக்கு திரும்பியுள்ளார். இதை சற்றும் மதியாத தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்து வாய் பிளந்து அவர் நடித்த காட்சிகளை பார்த்துக்கொண்டுள்ளனர் என்று பலர் தெரிவிக்கின்றனர்.

தன்யாவும், ரோஷத்தோடு கூறிய வார்த்தைகளை மறந்துவிட்டு இப்போது அதே தமிழகத்தில் பிழைப்புதேடி வந்துள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நாம் மறந்தாலும் கூறியவர் எப்படி அசிங்கம் இல்லாமல் மீண்டும் தமிழ் மொழியில் பேசி நடிக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.