விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினை முடிவுற்றதால் ‘மெர்சல்’ வெளியீடு உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் ‘மெர்சல்’ மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே ‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

mersal nithya menon

‘மெர்சல்’ படக்குழுவினரோடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகளின் அவசர ஆலோசனை சென்னையில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. அப்போது ‘மெர்சல்’ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.

அப்போது விலங்குகள் நல வாரியம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் படக்குழுவினர் பதிலளித்தார்கள். இதற்காக டெல்லியிலிருந்து விலங்குகள் நல வாரிய அதிகாரி சென்னை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படத்திற்கு எவ்வித தடையுமில்லை என்று விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பை இன்னும் சில நிமிடங்களில் விலங்குகள் நல வாரியத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

mersal

தற்போது, தணிக்கைப் பணிகளை இறுதி செய்ய படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. விரைவில் அப்பணிகளும் முடிவுற்று இன்று மாலையே வெளியீடு உறுதி செய்யப்பட இருக்கிறது.

சமீபகாலமாக பைரஸி இணையதளங்களினால் சினிமா உலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. புதிய படங்கள் திரைக்கு வரும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகி விடுவதால், தியேட்டர் வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த மாதிரியான பைரஸி இணையதளங்கள் திரையுலகினருக்கு சவால் விட்டபடி படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், தமிழ்கன் என்ற இணையதளத்தின் அட்மினை கைது செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அதன்பிறகு வெளியான துப்பறிவாளன் படம் அந்த இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது.

mersal magic
mersal magic

இந்த நிலையில், தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் திரைக்கு வருவதின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பைரஸி இணையதளங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், மெர்சல் படத்தை ரிலீஸ் அன்றே வெளியிடுவதாக முன்பு அறிவித்திருந்தோம். ஆனால், இப்போது ரிலீசாகி மூன்று நாட்களுக்குபிறகு வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு தைரியமாக வெளியிடும் இதுபோன்ற இணையதளங்களை திரையுலகினர் தடுத்து நிறுத்துவது எப்போது? என்று கேட்க தோன்றுகிறது. ஆனால்,

நடப்பதை எல்லாம் வைத்து பார்க்கும் போது திரையுலகை சேர்ந்த சில நபர்கள் தான் இந்த மாதிரியான திருட்டு வேளைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. என்னமோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.