dam

மோயாறு – நம்மால் அதிகம் பேசப்படாத ஆறு என்பதால்தான் களங்கமின்றி என்றும் வற்றா ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லைக்குட்பட்ட பகுதியில் உருவாகி, கர்நாடகம் வழியாக பாய்ந்தோடுகிறது.

மோயாறு – நம்மால் அதிகம் பேசப்படாத ஆறு என்பதால்தான் களங்கமின்றி என்றும் வற்றா ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லைக்குட்பட்ட பகுதியில் உருவாகி, கர்நாடகம் வழியாக பாய்ந்தோடுகிறது. பவானியின் துணை ஆறுகளில் மிகப்பெரிய ஆறாக திகழ்வதும் இந்த ஆறுதான். கேட்கவே புதிதாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும் இந்த ஆற்றைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக படிக்கப் போகிறோம் வாசகர்களே.

மேற்கு தொடர்ச்சி மலையின் முக்குருத்தி பகுதியில் பிறக்கும் மோயாறு, அங்கிருந்து பைக்காரா அணைக்குக் சென்று கூடலூர் வழியாக கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா, முதுமலை பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிகளை உள்ளடக்கிய தொங்குமரஹெடா பள்ளத்தாக்கு, தெப்பக்காடு வழியாக பயணித்து, பவானி சாகர் அணையை வந்தடைகிறது. சத்தியமங்கம், பவானி, ஈரோடு வரையிலான பாசனத்தில் இந்த மோயாற்றின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஜீவநதி என்ற பெருமையை தாங்கி நிற்கும் இந்த ஆற்றில் என்றுமே தண்ணீர் வளம் வற்றுவதில்லை. மலையக வனங்களுக்குள் பயணிக்கும் ஆறு என்பதால், இதில் மனிதர்களால் களங்கப்படாத ஆறாக விளங்குகிறது.

பவானி ஆறு நீலகிரியின் தெற்கில் பாய்கிறது என்றால், மோயாறு நீலகிரியின் வடக்கில் சுதந்திரப் பேரார்வத்துடன் பாய்ந்தோடுகிறது. இந்த இரு ஆறுகளும் இறுதியாக சந்திக்கும் இடத்தில்தான் பவானி சாகர் அணை வீற்றிருக்கிறது. மோயாற்றின் தெற்கு பகுதியும் வடக்கு பகுதியும் வெவ்வேறான உயிர்ச் சூழலை கொண்டிருக்கின்றன. தெற்கே உள்ள கொடநாடு, சோலைவனங்களைக் கொண்ட குளிர் பிரதேசம் ஆகும். வடக்கில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புதர் காடுகளைக் கொண்ட வெப்ப பிரதேசம் ஆகும். கொடநாட்டில் ஜீவிக்கும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள் போன்ற உயிரினங்கள் ஆற்றில் வடக்குப் பகுதியில் உயிர்வாழ்வது கிடையாது. இதுதான் மோயாறு உயிர்ச்சூழலின் தனிச்சிறப்பு. சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் மோயாற்றின் கரைகளில், 127 வகையான பறவை இனங்கள் வாழ்வதாக பல்லுயிர் நோக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது. கம்புள் கோழிகள், மூன்று வகையான மீன்கொத்திகள், சாம்பல் நாரைகள், கருடன், மர ஆந்தைகள், வாலாட்டிகள், பிணந்தின்னி கழுகுகள் போன்ற பறவைகள் குறிப்பிடத்தக்கவை.

அதிகம் படித்தவை:  பிகினி உடையில் நீது சந்திர வைரலாகும் புகைப்படம்.!

மோயாற்றின் பாதையெங்கும் அடர்ந்த காடுகள் என்பதால், அதன் நீரோட்டமானது காடுகளில் உள்ள அரிய மூலிகைகளை தொட்டே பயணிக்கும். எனவே இந்த ஆற்றின் நீரானது சுவையுடையதாகவும், மணமுடையதாகவும், மிக ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்திற்கு பிறகு தமிழகத்தில்தான் மழைப்பொழிவு குறைவு. மாநிலத்தில் உள்ள காவிரி டெல்டாவில் தண்ணீரின்றி வறட்சி ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இந்த மோயாற்றில் ஓடும் நீரின் அளவு சற்றும் குறைவதில்லை. இந்த ஆற்று நீர் மூலம் 36,0000 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கிடைகிறது. இதில் தமிழக மழைப்பொழிவு மூலம் கிடைப்பது 24,000 மில்லியன் கன மீட்டர் ஆகும். மீதமுள்ள 12,00௦ கன மீட்டர் நீரானது, அருகிலுள்ள கேரளம், கர்நாடகத்தில் இருந்து கிடைக்கிறது.

அதிகம் படித்தவை:  சாமி ஸ்கொயர் படத்தின் அதிர வைக்கும் மாஸ் தகவல்

மோயாற்றின் வடக்கு பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. அவ்வழியாக பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளை சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்து வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. காவிரி நீரோட்டம் மேட்டூர் நீர்த்தேக்கத்தை வந்தடைந்து, பின்னர் டெல்டா பாசனத்திற்காகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் திறந்துவிடப்படுகிறது

 

இது நாள் வரை, காவிரியில் தண்ணீர் கேட்டு கர்நாடகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால், மோயாற்றின் குறுக்கே அணை கட்டினால், காவிரியால் பிரச்சினைகள் ஏழாது என்ற உண்மை நமது அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புக்களே இல்லை. அரசியல் காரணங்களுக்காகவும், சில தொழில்முறை காரணங்களுக்காகவும் மட்டுமே மோயாறு என்பது மக்கள் பார்வையிலிருந்து இதுவரை திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது. இந்த மோயாறில் அணை கட்டினாலே, கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடும். நமது தண்ணீரை நாமே பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை பறித்துக்கொண்டு, காவிரியால் நம்மை வஞ்சிக்கும் கர்நாடகத்தின் கொட்டமும் அடங்கும்.