fbpx
Connect with us

இந்தியாவில் மற்றொரு சாதனை நிகழ்த்திய தமிழக முதல்வர்… நீர் மேலாண்மையில் முதலிடம்!

Tamil Nadu | தமிழ் நாடு

இந்தியாவில் மற்றொரு சாதனை நிகழ்த்திய தமிழக முதல்வர்… நீர் மேலாண்மையில் முதலிடம்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தை பட்டை தீட்டி  இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றி சாதனை புரிந்து வருவது நாம் அறிந்ததே.

மேலும் கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும்  தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னோடி மாநிலமாக உயர்த்தி பெருமைபடுத்தி இருக்கிறார் எடப்பாடியார்.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் நீர் மேலாண்மையில் சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் தேசிய விருது பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதாவது தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்ததில் சிறந்த மாவட்டங்களாக வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் நீர் நிலைகள் பாதுகாப்பில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மதுரை மாநகராட்சி தென்னிந்தியாவிலேயே நீர் மேலாண்மையை  சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்பு  என தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிறந்த ஆட்சிதான்.

இவ்வாறு மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை தீட்டி, தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி புரிந்து வரும் முதல்வர் எடப்பாடிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top