தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

திருச்சியில் 105 டிகிரி வெயிலும், மதுரை மற்றும் நெல்லையில் 104 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  அடையாளமே தெரியாதளவுக்கு மாறிப்போன நடிகர் ஜெயராம் ! புது லுக் வைரல் போட்டோ உள்ளே !

சென்னையில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், “அடுத்த இரண்டு நாள்களில், தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரிக்கு வெயிலின் அளவு அதிகரிக்கும். முக்கியமாக வேலூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 41 டிகிரி முதல் 44 டிகிரிக்கு வெயில் பதிவாகும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாசோ பொங்கலோ கிடையாது என்று இயக்குனர் பாலா சொன்னதை நினைவு கூர்ந்த சூர்யா !.

அதனால் பகல் வேளையில் முதியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.