fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழகம் முழுவதும் வெளுக்கும் மழை.. இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்! வானிலை மையம்

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகம் முழுவதும் வெளுக்கும் மழை.. இந்த 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்! வானிலை மையம்

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளதாக கூறிய அவர், அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும் இராமநாதபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கன மழையைப் பொறுத்த வரையில் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.

குமரிக் கடல் பகுதியில் பலத்த சூரைக் காற்றானது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு இன்று செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரையில் கடந்த அக். 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 42 செ.மீ . ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 36 செ.மீ . இயல்பை விட 13 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது” இவ்வாறு கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top