fbpx
Connect with us

Cinemapettai

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!

rain_cinemapettai

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!

கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வருகின்ற 4ம் தேதி தொடங்குகிறது. இதனால் வருகின்ற நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் அனல் காற்று வீசுவது தொடரும். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் முன்பாக கோடை மழை பெய்வது வழக்கம். இதனால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இது பற்றி சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக உள் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை மழை பெய்ய வாய்ப்பில்லை.

தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top