Politics | அரசியல்
திருமாவளவனை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவரை கைது செய்யுமாறு போலீசில் புகார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்மையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்து மத கோவில்கள் குறித்து பேசியது சர்சைக்குள்ளனது.
இதனை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் விமர்சனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த நிலையில் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவர் திருமாவளவனை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது சமூக நல்லிணக்கத்திற்கும் சாதிய மோதலை உருவாகும் நோக்கில் இருப்பதால் திருவள்ளூர் மண்டல செயலாளர் கௌதமன் கோப்பு தலைலைமையில் செழியன் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர், பூவை ஒன்றிய செயலாளர் கர்ணா, நரேஷ், பூவை பிரபு உள்பட 20கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மண்டல செயலாளர் கௌதமன் கூறுகையில் அனைவராலும் மதிக்கப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.
மேலும் அந்த பதிவின் மூலம் சாதிய மோதல் உருவாகும் வகையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட நபரினை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளோம், நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
