fbpx
Connect with us

Cinemapettai

கையில் பீர் பாட்டில், சரக்கு அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வலுக்கும் கண்டனம்

Tamil Nadu | தமிழ் நாடு

கையில் பீர் பாட்டில், சரக்கு அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வலுக்கும் கண்டனம்

நாகை: இளைஞருடன் சேர்ந்து இளம்பெண்கள் சரக்கு அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வீட்டின் சிறிய அறையில் இளம் கல்லூரி மாணவிகள் 2 பேர் யூனிபார்மில் உள்ளனர். மேலும் சில பெண்கள் அந்த அறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரே ஒரு இளைஞர் மட்டும் அந்த பெண்களுடன் அமர்ந்திருக்கிறார்.  நடுவில் பீர்பாட்டில்களும், ஸ்நாக்ஸ்களும் காணப்படுகின்றன.

இந்த மோசமான சம்பவம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்திருக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு மாணவி கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார். இன்னொரு மாணவி கையில் ஸ்நாக்ஸ் வைத்திருக்கிறார். அந்த இளைஞர் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்து எடுக்கிறார். இதில் அனைவரும் சேர்ந்து சரக்கு அடிக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

beer-video

beer-video

வைரலான இந்த வீடியோ கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றதால் சம்பந்தப்பட்ட மாணவிகளை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் பாமக கட்சியின் தலைவரான ராமதாஸ் இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top