fbpx
Connect with us

Cinemapettai

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள்.. நாம் தமிழர் கட்சி சின்னமே இல்லை

Tamil Nadu | தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள்.. நாம் தமிழர் கட்சி சின்னமே இல்லை

உள்ளாட்சி அமைப்புகள் என்பது மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட பிரிவுகள் ஆகும். அதற்கு நடக்கும் தேர்தல் தான் உள்ளாட்சி தேர்தல். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் 2019 இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலை கண்காணிக்க சுமார் உள்ளாட்சி தேர்தல் சுழற்சி முறை2 லட்சம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. சுமார் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இது குறித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் சுவாரசியங்கள்:

கோவையில் நடிகர் சீமான் தலைமையில் உருவான நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் வாக்காளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் கட்சி நிர்வாகமும் சற்று ஆடிப்போய் உள்ளது. பின்பு வந்து வாக்கு சீட்டுகளை ஒட்டி உள்ளார்கள்.

voter-election

voter-election

அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென பேனர் அடித்து பட்டையைக் கிளப்பியுள்ளனர். அதாவது ஊராட்சி மன்ற தலைவராக செயல்படுபவர்கள், எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதற்கான முழு கணக்கு விபரமும் மக்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அரசியல் கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளது.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை மக்கள் ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்தியே ஓட்டு செலுத்தி வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் முதல் முறையாக மின்னணு இயந்திரம் உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கொடுமை என்னவென்றால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு, உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க தவறிவிட்டதால் இளைஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் நாங்கள் ஓட்டு போடவா? வேண்டாமா? எனவும் அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? என்ற விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வயது வரம்பு 21 இருந்தால் போதும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top