தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், ஸ்விட்சர்லாந்தில் இருந்து, தமிழகத்திற்கு 540 ஜெர்ஸி இன மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகளை அழிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழகத்தில் மாணவர்களும், சமூக நல ஆர்வலர்களும் கிளர்ந்தெழுந்துள்ளனர். பல இடங்களில் தன்னெழுச்சியாக, அவர்கள் நடத்திவரும் போராட்டங்களால், தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.