Connect with us

Cinemapettai

24 மணி நேரமும் இனி கடைகள், தியேட்டர்கள் திறந்து இருக்கும்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

shops-opened-24-hours-chennai

Tamil Nadu | தமிழ் நாடு

24 மணி நேரமும் இனி கடைகள், தியேட்டர்கள் திறந்து இருக்கும்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் திறந்து வைத்து கொள்ளலாம் என அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

வழக்கமாக தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து கடைகளும், அலுவலகங்களும், சினிமா தியேட்டர்களும் திறந்து இருக்கும். இதனை வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இதனை ஏற்றுகொண்டு தமிழக அரசு 24 மணி நேரமும் கடையை திறந்து வைத்துக் கொள்ளலாம் எனவும், ஆனால் ஒருவர் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும், பெண்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை அவர்கள் அனுமதி பெற்று வேலை வைத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி இரவு நேரங்களில் அனைத்து கடைகளும் திறந்திருக்கும், வேண்டிய பொருட்களை வாங்கி கொள்ளலாம், ஹோட்டல்களில் சாப்பிடலாம், சினிமா தியேட்டர்களில் படம் பாக்கலாம், ஆனால் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் சுற்றி மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top