fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

News | செய்திகள்

நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

Nadigar Sangam Star Cricket

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக வருகிற 17ந் தேதி சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த போட்டிகள் நடக்கிறது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு தேர்தல் கமிஷனிடம் உள்ளது. அதனால் தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தால் மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியும் என்று காவல்துறை கூறிவிட்டது. இதனால் நடிகர் சங்கம் சார்பில் தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுகொண்ட தேர்தல் கமிஷன் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கி நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பிற்கு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு போட்டியின் போது சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top