Connect with us
Cinemapettai

Cinemapettai

shop-tamilnadu-chennai-cinemapettai

India | இந்தியா

7ம் தேதி சென்னையில் மதுகடைகள் இல்லை.. வேறு எங்குதான் கிடைக்கும்.. இதோ முழு விபரம்

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு மதுக்கடைகள் மே 7-ஆம் தேதி திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை மாநகர காவல் என்று பார்த்தால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளும் இதில் அடங்கும். ஏனென்றால் கொரோனாவின் தோற்று அதிகரித்துக் கொண்டே வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்க முடிவு தான், அனைத்து சமூக நல வாசிகளிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏனென்றால் மற்ற மாநிலங்களில் ஒயின் ஷாப் திறந்தவுடன் அலைகடல் போல் கூட்டம் குவிந்ததால், வைரசின் பாதிப்பைப் பற்றி ஒரு துளி கூட கவலைப்படாமல் இருக்கின்றனர்.

இதே சூழ்நிலை தமிழ்நாட்டில் வந்தால் கண்டிப்பாக குடிமக்களை கட்டுப்படுத்த முடியாது. இதுமட்டுமில்லாமல் காவல்துறையினருக்கு இதில் முழு அக்கறை உள்ளது ஏனென்றால் அவர்கள்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் இதனால் தற்போது பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரும் பாதிக்கப்படுவார்கள்.

இதை தடை செய்தது வரவேற்கத்தக்கதுதான், ஆனாலும் தமிழக அரசின் வருமானம் ஒயின்ஷாப் நம்பித்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் கர்நாடக மாநிலங்களில் 45 கோடி முதல் மற்ற மாநிலங்களில் 100 கோடி வரை ஒரே நாளில் விற்று தீர்ந்து விட்டன.

தமிழகத்தில் கிடைக்கும் பகுதிகள்:

தற்போதைய சூழ்நிலையில் சென்னையில் கிடைக்காது ஆனால் தாம்பரத்தை தாண்டினால் அல்லது சிறுசேரி பகுதியை தாண்டினால் கிடைக்க வாய்ப்புள்ளதாம். நம்ம ஊர் பார்டர் பக்கம் ஆந்த்ராவை நோக்கி சென்றால் ஒரு மணி நேரத்தில் வாங்கி விடலாம் என கணக்கு போடுகிறார்கள்.

மேலும் மாதவரத்தை தாண்டினால் கூட சென்று வாங்கி விடலாமாம். சென்னை தவிர அனைத்து ஊர்களிலும் கிடைக்குமாம் அப்படி என்றால் எல்லாம் ப்ளாக்கில் வாங்கித்தான் விற்பார்கள்.

பஞ்சாப் மாநிலம் ஒரு படி மேல் சென்று இதில் புதிய முறையை கையாள உள்ளது, அதாவது எப்படி உணவு ஆன்லைனில் புக் பண்ணுகிறார்கள், அதேபோல் தேவையான மதுவை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பெங்களூரில் ஒருவர் மட்டும் 57ஆயிரம் ரூபாய்க்கு மது பாட்டில்களை வாங்கி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடை மீது வழக்கும் போட்டுள்ளனர்.

Continue Reading
To Top