Tamil Nadu | தமிழ் நாடு
இந்தியாவில் முதலீட்டுச் சந்தையில் முதலிடம் பிடித்த தமிழகம்.. சாதனை புரிந்த எடப்பாடியார்!
தமிழகத்தில் அதிமுக அரசின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார். மேலும் இவர் பல்வேறு திட்டங்களால் தமிழகத்தை பட்டை தீட்டி வருவது நாம் அறிந்ததே.
அந்த வகையில், வருகின்ற 2021 ஆம் வருடத்தின் முதல் பகுதியில்(H1FY21) தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட அதிக அளவு முதலீடுகளை பெற்று சாதனை புரிந்துள்ளதாக கேர் மதிப்பீடுகள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த வருடம் (2020)முதல் பகுதியில்(H1FY20) ஆந்திரப் பிரதேச மாநிலம் அதிக முதலீட்டு பங்கை பெற்றிருந்தது. அதாவது ரூபாய் 1.1 ட்ரில்லியன் மதிப்பிலான 23% முதலீட்டை பெற்றது ஆந்திர மாநிலம்.
தற்போது ஆந்திர மாநிலத்தை அடித்து தூக்கிவிட்டு தமிழகம் வருகின்ற 2021 ஆம் ஆண்டின் முதல் பகுதியில்(H1FY) 16% முதலீட்டை பெற்று இந்தியாவிலேயே அதிக முதலீட்டை பெற்ற மாநிலமாக மாறி சாதனை புரிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆந்திரப்பிரதேசம் 11% ,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகியவை தலா 7%, மற்ற மாநிலங்களுக்கு மீதமுள்ள சதவிகித முதலீடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் இந்த வருட முதல் பாதியில் (2020) முதலீட்டு பங்குச்சந்தையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழ்நாடு அதிக முதலீட்டை பெற வைத்தது மட்டுமல்லாமல் 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது எடப்பாடியாரின் அரசு.
எனவே, முதலீட்டுச் சந்தையில், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை முதல் இடத்திற்கு முன்னேற்றிக்காட்டிய எடப்பாடியாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

edapaadi
