தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கோடை காலம் தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100டிகிரிக்கும் மேல் அதிகமாக வெப்பம் நிலவுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாளை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அனல் காற்று பலமாக வீசும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாக காணப்படும்.

மேலும், இந்த மாவட்டங்களில் மதிய நேரங்களில் அனல் காற்று வேகமாக வீசும். இந்த சமயத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.