Tamil Nadu | தமிழ் நாடு
144 தடை விதித்துள்ள தமிழக அரசு.. மக்களே உஷார் படுத்தும் விஜயபாஸ்கர்
உலக அளவில் பயமுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவை விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் மக்கள் வெளி வரவேண்டாம் என்று ஆணை பிறப்பித்து இருந்தது மத்திய அரசு.
இதனை முழுமையாக கடைப்பிடித்த மக்கள் வீட்டினுள் முடங்கிக் கிடந்தனர். மீண்டும் நாளை 24.03.2020 மாலை 6 மணி முதல் 144 தடை தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. இந்த நிலை இம்மாதம் 31ஆம் தேதிவரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்த்து விட்டனர். ஆனாலும் கம்யூனிட்டி ஸ்ப்ரிட் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

144
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மருத்துவ உதவி அல்லது ஏதாவது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளிவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தாண்டி அலுவலகங்களில் ஊழியர்களை வேலை செய்வதற்கு அழைத்தாள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் கொரோனா வைரஸின் அச்சம் இருந்தாலும் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த போராட்டத்தில் இருந்து ஜெயிக்க முடியும்.
