Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிளஸ் 2 ரிசல்ட்: டாப் 3 பெஸ்ட் மற்றும் மோசமான மாவட்டங்கள் இவைதான்!
சென்னை: இந்த வருடமும் கடந்த ஆண்டை போலவே பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வேலூர் மாவட்டம், ஆனால் விருதுநகர் மாவட்டம் தனது பெருமையை தக்க வைத்து முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% ஆக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், 97.85 ஆகும். எனவே இம்மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது
2வது இடத்தில் அதன் அண்டை மாவட்டமான ராமநாதபுரம் உள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 96.77 சதவீதம். டாப் வரிசையில் 3வது இடம் ஈரோடு மாவட்டத்திற்கு. இம்மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.69 ஆகும். இதேபோல கடைசி 3 இடங்களிலுள்ள மாவட்டங்கள் பட்டியல் இவைதான்: வேலூர் 84.99 சதவீதம், கடலூர் 84.66, கிருஷ்ணகிரி 88.02. கடைசி 3 இடங்களை பிடித்துள்ள மாவட்டங்களுக்கு கல்வி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிளஸ் 2 ரிசல்ட் அம்பலமாக்குகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
