Tamil Nadu | தமிழ் நாடு
சுங்கச்சாவடியில் அடாவடி செய்த தம்பிகள்.. நெம்பி எடுத்த ஊழியர்கள்
புதுக்கோட்டை அருகில் ஒரு சுங்க சாவடியில் கட்டணம் கேட்டதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோத்குமார் தர முடியாது என சண்டை செய்துள்ளார். ஊழியர்கள் அவரை விடாமல் இடைமறிக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோத்குமார் கட்டையால் அவர்களை தாக்கி உள்ளார்.
பிறகு அனைத்து ஊழியர்களும் சேர்ந்து வினோத் குமாரையும் அவர்கூட வந்தவர்களையும் புரட்டி எடுத்துள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்ற வினோத்குமார் சுங்க சாவடி ஊழியர்கள் விடாமல் துரத்திக்கொண்டு அடித்தனர்.
அவருடைய சட்டையை கிழித்து அடித்ததில் பலத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பி மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். இது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. தெரிந்தால் எனக்கு அசிங்கம் என வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் தராமல் இருந்துள்ளார்.
இது சில நாட்கள் கடக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள வினோத்குமாரை சென்ற விசாரித்ததில் வினோத்குமார் பதிலுக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இப்பொழுது சுங்கச்சாவடி ஊழியர்கள் மேல் வழக்கு பதிந்துள்ளது.
