தமிழிசை பின்னணியில் எம்ஜிஆர்.. திடுக்கிடும் தகவல்

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி நிர்ணயிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன்க்கு பல தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் மீம்ஸ் ஆல் அதிகம் கலாய்க்கப்பட்ட அரசியல் தலைவர்களில் தமிழிசை சௌந்தரராஜனும் ஒருவர். தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்ற வசனம் இவர் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் வந்தது தான்.

ஆனால் தற்போது ஹேர் ஸ்டைலை மாற்றியதை போல மேலிடத்திலிருந்து பதவியை மாற்றி இருப்பதும் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழிசை, தங்கப்பாண்டியன் கனிமொழி ஆகியோர் சிறுவயதில் ஓமந்தூரார் தோட்டம் பகுதியில் வசித்து வந்தனர். அப்பொழுது அரசியல் கூட்டங்கள் அடிக்கடி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் மாபெரும் காங்கிரசின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் தான் தமிழிசை. இதன் காரணமாகவே அடிக்கடி பெரிய அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இது மட்டுமில்லாமல் சிறு வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது எம்ஜிஆருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழிசை என்ற பெயரை தன் தந்தை ஏன் சூட்டினார் என்பதற்கான விளக்கத்தையும் எம்ஜிஆர் கூறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். எம்ஜிஆர் கூறியதாவது:-“தமிழ் மீது கொண்ட பற்றால் தான் உன் தந்தை உனக்கு தமிழிசை என்ற பெயர் சூட்டி இருக்கிறார் ஆகையால் அவரைப் போன்றே அரசியலில் உச்ச இடத்தை அடைய வேண்டும்”என்று புன்னகை மலர கூறியுள்ளார்.

Leave a Comment