fbpx
Connect with us

Cinemapettai

தமிழர்கள் என்றால் புலிகள் என்று தெரியும்! – ராகுல் காந்தி

rahul-gandhi-in-chennai

News | செய்திகள்

தமிழர்கள் என்றால் புலிகள் என்று தெரியும்! – ராகுல் காந்தி

எப்போதாவது தமிழகம் வந்து… வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விடுவார் ராகுல் காந்தி. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் தேவைப்படும் என்பதால் அதிகாரிகளும் அவரை அனுமதிப்பதில்லை. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இரண்டு நாள்கள் இருந்தார் ராகுல். இம்முறை அவரிடம் பல ஆச்சர்ய மாற்றங்கள். பொதுவாகக் கருணாநிதியை ராகுலுக்குப் பிடிக்காது என்பார்கள்.

இதற்குமுன் தமிழகம் வந்த ராகுல், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கருணாநிதியைச் சந்தித்தார். இப்போது கருணாநிதியின் சட்டமன்றப் பணிகள் வைர விழாவுக்கு வந்து அவரையும் ஸ்டாலினையும் பாராட்டித் தள்ளினார். இதில் தி.மு.க-வினரைவிட காங்கிரஸ்காரர்கள்தான் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரணம், சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல் வந்தது தான். ஆறாண்டுகளுக்குப் பிறகு ராகுல் அங்கு வந்து, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுடன் மனம்விட்டு உரையாடினார். இந்தச் சந்திப்பைத் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தார். 250 பேர் உட்காரும் அரங்கில் கோஷ்டி பேதமில்லாமல் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வுசெய்து அமர வைத்திருந்தார்.

நிர்வாகிகள் பலரும் ராகுலுடன் நெருங்கிக் கைகொடுத்து ஓரிரு வார்த்தைகள் பேச முயன்ற போது ராகுல் தன் பாதுகாப்பு அதிகாரிகளை விலகியிருக்கும்படி கூறிவிட்டு, நிர்வாகிகளோடு நெருங்கி, இயல்பாக உரையாடியிருக்கிறார். தமிழர்கள் மத்தியில் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். எங்கள் குடும்பத்தாரோடு இருப்பதாகவே உணர்கிறேன். இவை வெறுமனே உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகள் அல்ல, ஆத்மார்த்தமாகச் சொல்கிறேன்.

என் சகோதரி பிரியங்காவுக்கு, ‘நான் இப்போது அன்பிற்கினிய நம் தமிழர்களோடு இருக்கிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அதற்கு அவர், ‘நானும் உங்களோடு இருக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார். எனக்கு எப்போதும் தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் பாசமும் உண்டு. என் தந்தைக்குத் தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் பாசமும் இருந்தது.

தமிழகம் வந்து போவதில் அவ்வளவு மகிழ்ச்சி அடைவார். அதேபோன்றுதான் என் பாட்டி இந்திராவும், பாட்டியின் அப்பா நேருவும் தமிழகத்தை நேசித்தனர். தமிழகம் என் குடும்பத்தைப் போன்றது. தமிழர்களுக்கு என்று ஒரு கலாசாரம் இருக்கிறது. பண்பாடு, நாகரிகம் இருக்கிறது. வீரம் இருக்கிறது. தமிழர்கள் என்றால் புலிகள் என்பதை நான் அறிவேன். (இப்படி மூன்று இடங்களில் சொன்னார்).

ஒருமுறை என் நண்பர்களிடம் அருகில் இருந்த ஒருவரைக் காட்டி, ‘இவர் தென்னிந்தியர்’ என அறிமுகப்படுத்தினேன். அவர் கோபித்துக் கொண்டார். ‘தவறாக ஏதும் கூறிவிட்டேனா?’ எனக் கேட்டேன். ‘ஆமாம். அது என்ன தென்னிந்தியர்? ஒன்று இந்தியர் என்று அறிமுகப்படுத்துங்கள். அல்லது தமிழர் என்று அறிமுகப்படுத்துங்கள்’ என்று கூறினார்.

அவர் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன். அதற்கு மதிப்பளிக்கிறேன். அன்றிலிருந்து நான் யாரையும் ‘தென்னிந்தியர்’ என்று பேசுவதே கிடையாது. ‘இவர் தமிழ்நாட்டவர்’, ‘இவர் ஆந்திர மாநிலத்தவர்’, ‘இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்’ என்றுதான் பேசி வருகிறேன்.

இந்தியா ஒரே நாடுதான் என்றாலும், இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு பண்பாடு, கலாசாரம், வரலாறு, வீரம் என்று இருக்கின்றன. அதை நாம் ஏற்க வேண்டும். பிரதமராக இருக்கும் மோடிக்கு அது புரியவில்லை.

‘நான் என்ன கலாசாரத்தைக் கொண்டிருக்கிறேனோ, அதை மற்றவர்கள் ஏற்க வேண்டும்’ என்று திணிக்கிறார். ‘நான் என்ன பண்பாட்டை ஏற்றிருக்கிறேனோ, அதையே மற்றவர்கள் ஏற்க வேண்டும்’ என்கிறார். ஹிட்லரைப் போன்று நடந்துகொள்கிறார். இந்தக் கருத்துத் திணிப்பை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அதைப்போல உங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

இங்கே பேசிய பலரும், நான் அடுத்தமுறை தமிழகம் வரும்போது பிரதமராகத்தான் வர வேண்டும் என்றார்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் உள்ளன. அதுவரை நான் தமிழகம் வரக்கூடாதா என்ன? என்னால் அப்படி இருக்க முடியாது. இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

அரசியல் கூட்டணி என்பது வேறு. தி.மு.க-வோடு கூட்டணி இருக்கலாம். அ.தி.மு.க-வோடு, கம்யூனிஸ்ட்களோடு, பாட்டாளி மக்கள் கட்சியினரோடு என்று பலருடனும் கூட்டணி வைத்துக்கொள்வது வேறு. ஆனால் நமது நோக்கம், ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும்’ என்பதே. அதற்கேற்ப நம் கட்சியின் செயல்பாடு இருக்க வேண்டும். எல்லோரும் கிராமங்களை நோக்கிச் செல்லுங்கள்.

மத்திய அரசின் நடவடிக்கையால் துன்பத்தில் தவிக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுங்கள். என்னையும் அழையுங்கள். உங்களோடு சேர்ந்து கிராமம் கிராமமாகச் செல்ல ஆவலாக இருக்கிறேன்’’ என்றெல்லாம் பேசியிருக்கிறார் ராகுல். ராகுல் காந்தியின் இந்தச் சந்திப்பும் பேச்சும், கட்சி நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சி. ‘‘இதற்கு முன்பு இப்படி ராகுல் பேசியதே இல்லை. இந்த முறை தொண்டர்களின் இதயங்களைத் தொட்டு விட்டார்’’ என்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top