‘‘தமிழ்ப் பெண்கள் கேவலமானவர்கள்’’ கேரள அமைச்சர் திமிர் பேச்சு! தமிழ் பெண்கள் போராட்டம்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

‘‘தமிழ்ப் பெண்கள் கேவலமானவர்கள்’’ கேரள அமைச்சர் திமிர் பேச்சு! தமிழ் பெண்கள் போராட்டம்!

MAnju_Cinemapettai

‘‘தமிழ்ப் பெண்கள் கேவலமானவர்கள்’’ கேரள அமைச்சர் திமிர் பேச்சு! தமிழ் பெண்கள் போராட்டம்!

மூணார் மலைப்பகுதியில் டாடா நிறுவனத்துக்கு சொந்தமான கண்ணன் தேவன் டீ நிறுவனத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.

இதில் 90 சதவீதம் பேர் தமிழ்பெண்கள். நாள் ஒன்றுக்கு ரூ.500 கூலி உயர்வு வேண்டும். 21 கிலோ தேயிலை தான் பறிக்க முடியும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2015ல் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்திற்கு பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டின் தலைமையேற்றார். இந்த போராட்டத்தை தோல்வி அடைய செய்வதற்காக தொழிற்சங்கங்கள் பல்வேறு மறைமுக வேலைகளை செய்தன.

மலையாளப் பத்திரிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தமிழ் தீவிரவாதிகள் என செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் கோமதியின் விடாமுயற்சி பெண்கள் அமைப்பிற்கு வெற்றியை பெற்று தந்தது.

இந்நிலையில் மூணாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கேரள மின்வாரியத்துறை அமைச்சர் எம்.எம்.மணி பேசுகையில், பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த பெண்கள் தவறானவர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் என்னவெல்லாமோ செய்கிறார்கள் என்று தமிழ்பெண்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். மேலும் அமைச்சர் எம்.எம்.மணி பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் மூணார் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் எம்.எம்.மணி, இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். மன்னிப்பு கேட்க சொன்னால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என திமிராக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top