fbpx
Connect with us

Cinemapettai

பல வெற்றி படங்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் போன இயக்குனர்கள்.. ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மிச்சம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல வெற்றி படங்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் போன இயக்குனர்கள்.. ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மிச்சம்

சினிமாவில் படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதன் பிறகு அந்த இயக்குனர்கள் பேசப் படவில்லை என்றால் அது ஏமாற்றம் தான். அந்த வகையில் சூப்பர்ஹிட் படங்களை இயக்கியும் தமிழ் சினிமா கண்டுகொள்ளாத இயக்குனர்கள் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரவண சுப்பையா: அஜித் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது சிட்டிசன். இன்று அத்திப்பட்டியைத் தேடி தேடி ரசிக்கும் ரசிகர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தை இயக்கியவர் சரவண சுப்பையா. பல படங்களில் போலீஸ் அதிகாரியாக இவரைப் பார்த்திருக்கலாம்.

saravana-subbaiya

saravana-subbaiya

சந்தான பாரதி:

கமல் வாழ்கையில் அழிக்கமுடியாத படம்தான் குணா. இந்த படத்தை இயக்கியவர் பிரபல குணச்சித்திர நடிகர் சந்தானம் பாரதி. காமெடி நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் ஒரு இயக்குனர் என்பதே தற்போதுதான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. கமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்ன மாப்பிள்ளை, மகாநதி, வியட்நாம் காலனி போன்ற படங்களை இயக்கியவர்.

santhana-bharathi

santhana-bharathi

ராஜ்கபூர்:

பல படங்களில் மிரட்டல் வில்லனாக இவரைப் பார்த்திருக்கலாம். ராசுமதுரவன் இயக்கிய அனைத்து படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பார். சமீபகாலமாக காமெடி கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் அஜித்துக்கு அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர்.

raj-kapoor

raj-kapoor

ரவி மரியா:

ஜீவா அறிமுகமான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அடிப்படையில் இயக்குனராக இருந்தாலும் தற்போது பல படங்களில் காமெடி நடிகராக பட்டையை கிளப்பி வருகிறார் ரவி மரியா. நடராஜ் நடித்த மிளகா படமும் இவர் டைரக்ட் செய்ததுதான்.

ravi-mariya

ravi-mariya

மனோபாலா:

சமீப காலமாக வெளிவரும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ மனோபாலா கண்டிப்பாக இருப்பார். அந்த அளவு ஒரு கதாபாத்திரத்திலாவது நடித்து விடுவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சூப்பர் ஹிட் படமான ஊர் காவலன் படத்தை கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

manobala

manobala

ஜெகன்:

ராசு மதுரவன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவர் விஜய்க்கு புதிய கீதை என்ற படத்தை கொடுத்தவர். படம் தோல்வியை சந்தித்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருப்பமான லிஸ்டில் உள்ளது. ராமன் தேடிய சீதை, கோடம்பாக்கம் போன்ற படங்களையும் டைரக்ட் செய்துள்ளார்.

jagan

jagan

Continue Reading
To Top