முன்பெல்லாம் டிவி சீரியல் என்றாலே ஒரு கண்ணியம் இருந்தது. குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் வகையில் இருந்தது. மேலும் பெண்களால் மட்டுமே விரும்பி பார்க்கப்பட்டு வந்த சீரியல் தற்போது ஆண்களையும் கட்டுப்போட்டு உள்ளது.

ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் சீரியல் கலாசாரம் வேறு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த தொழிலிலும் போட்டிகள் அதிகரித்து விட்டது. அதற்கேற்ப நடிகைகளும் அதிகரித்து விட்டார்கள். போட்டியால் நடிகைகள் கவர்ச்சி களத்தில் குதித்து விட்டனர். இதனால் நடிகைகள் எந்த எல்லைக்கும் தயார் வாய்ப்பு கிடைத்தால் என்ற நிலையில் உள்ளனர். இதனால் படத்தை விட சீரியல்களிலும் ஆபாசம் தலைதூக்கி உள்ளது.

 

முன்பெல்லாம் சீரியல் என்றால் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பார்கள். சீரியல் நேரத்தில் ரிமோட்டை தொடும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால் தற்போது தமிழில் இந்தி டப்பிங் சீரியல்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி போன்ற சீரியல்கள் கவர்ச்சியின் எல்லையை தாண்டி விட்டது.

இது போன்ற சீரியல்களை பார்க்கும் போது குடும்ப தலைவிகள் முகம் சுளிப்பதோடு ரிமோட்டை தேட ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் சினிமா போல சீரியல்களுக்கும் சென்சார் போர்டு தேவை என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.