Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் டாப் 5 வசூலில் இடம் பிடித்த படங்கள்.. பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்
தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் பொன்னான ஆண்டாக அமைந்து உள்ளது. காரணம் உலக அளவில் தமிழ் சினிமா இந்த வருடத்தில் ஆயிரம் கோடியை கடந்து சாதனை செய்துள்ளது. இதனை சினிமா உலகத்தினர் வரவேற்றுள்ளனர்.
இந்த வருடத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த அனைத்து திரைப்படங்களும் வசூலில் பெரிய வெற்றி பெற்றது. சிறிய முதலீட்டில் வெளிவந்த பழைய படங்களும் பெரிய அளவில் வசூல் செய்துள்ளன. அந்த வகையில் பிரபல நாளிதழ் ஒன்று இந்த வருடத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலாவது இடத்தை தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெற்றிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் 250 கோடி வசூல் செய்த தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் உள்ளது.
தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் 200 கோடி வசூல் செய்து மூன்றாவது இடம் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் உள்ளதை யாராலும் நம்ப முடியவில்லை.
ஐந்தாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 112 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அடிப்படையில் வசூல் நிலவரங்கள் குறித்து இருந்தால் கண்டிப்பாக விஸ்வாசம் திரைப்படம் இரண்டாவது இடம் பெற்றிருக்கும்.
உலக அளவில் இருந்தால் நம்ம வீட்டு பிள்ளை படம் லிஸ்டிலேயே இருந்திருக்காது. காரணம் தனுஷ் நடித்த அசுரன் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கார்த்தியின் கைதி திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளது.

deccon-chronicle
இதைப் பற்றி பத்திரிக்கை விவரம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.
