fbpx
Connect with us

Cinemapettai

சம்பள குறைப்பு பற்றி வாயே திறக்காத முன்னணி நடிகர்கள்.. என்ன பண்ணாலும் பிரயோஜனம் இல்லையாம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சம்பள குறைப்பு பற்றி வாயே திறக்காத முன்னணி நடிகர்கள்.. என்ன பண்ணாலும் பிரயோஜனம் இல்லையாம்

கொரானா ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அது மட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் பல நஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது சம்பளங்களில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிக்கை விட்டனர். அந்த வகையில் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்றோர் வெளிப்படையாகக் கூறினர்.

சிறிய அளவு சம்பளம் வாங்கும் இவர்களே சம்பள விஷயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடந்து கொண்டால் சீனியர் நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா. அதுதான் கிடையாது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, விக்ரம் போன்றோர் இன்னமும் தங்களது சம்பள விஷயத்தை பற்றி வாய் திறக்காமல் உள்ளனர். பெரும்பாலும் இவர்களை வைத்து படமெடுப்பது பெரிய நிறுவனங்கள் என்பதால் அமைதியாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

உதாரணமாக இருக்க வேண்டிய முன்னணி நடிகர்களே சம்பள விஷயத்தில் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதால் சிறிய நடிகர்கள் தேவையில்லாமல் அவசரப்பட்டு விட்டோமோ என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Continue Reading
To Top